அமைதியாக இருந்து சாதித்த தந்தை! நடிப்பிற்காக மருத்துவத்தை தூக்கி போட்டாரா சங்கர் மகள்?

daughter shankar karthi viruman aditishankar
By Edward Sep 08, 2021 01:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட் இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் சங்கர். தற்போது ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி ஜோடி போட்டு நடித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் கொரோனா லாக்டவுன் முடிந்த சமயத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கும் கிரிக்கெட் வீரருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்திருந்தார்.

இதையடுத்து இரண்டாம் மகள் அதிதி சங்கரை திடீரென நடிகையாக கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் கமிட்டாக்கியுள்ளார். பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட படம் வெளியீட்டு விழாவில் சூர்யா, பாலா, யுவன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் சங்கர் மகள் அதிதி மருத்துவர் படிப்பை முடித்ததாகவும் மருத்துவராக பணியாற்ரியும் வந்தள்ளார். நடிக்க ஆசை இருந்ததாகவும் அதனால் தான் சினிமாவில் நடிகை பிரபல சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதை யாருக்கும் தெரியாமல் இயக்குநர் சங்கர் நடிகையாக அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், தமன்னா காஜல் அகர்வால், சூர்யா, கார்த்தி போன்றவர்களுக்கு ஆர்ட்டிஸ்(கால்ஷீட்) மேனேஜராக இருப்பவர் தங்கதுறை. அவரை சங்கர் திடீரென தனக்கும் மேனேஜராக்கியுள்ளார். தம் மகளுக்காக இப்படியொரு பிளானை யாருக்கும் தெரியாமல் செய்துள்ளாராம் சங்கர்.