தமன்னாவுக்கு ஒருசில நிமிடங்கள் கொடுத்த இயக்குநர் ஷங்கர்..
shankar
tamanna
kiara advani
By Kathick
பிரமாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சங்கர். இவர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
தமன் இசையமைக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகி உள்ளார்.
மேலும், இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை தமன்னாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் தற்போது என்னவென்றால், இப்படத்தில் நடிகை தமன்னா ஒருசில நிமிடங்கள் மட்டுமே நடிக்க கமிடங்கியுள்ளார் என்றும், இது ஒரு கெஸ்ட் ரோல் மட்டும் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.