அந்த நடிகை தான் வேண்டும்! இயக்குநர் சங்கர் ராஷ்மிகாவை தூக்கி எறிய இதுதான் காரணம்..
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயர் பெற்றவர் இயக்குநர் சங்கர். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளித்துள்ள நிலையில் சங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் ஜோடி சேர்ந்துள்ளார். முதன்முதலில் தெலுங்கு படத்தை இயக்கவிருக்கும் சங்கர், அப்படத்தை பிரம்மாண்ட அளவில் உருவாக்க இருக்கிறாராம்.
இந்நிலையில் அப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. பாலிவுட் நடிகை கியாரா அத்வானி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் நடிகை அஞ்சலி இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவிருக்கிறாராம். பல நடிகைகளை தேர்வு செய்து அவர்களின் கால்ஷீட் போன்ற காரணங்களால் சங்கர் வேண்டாம் என்று தூக்கியிருந்தார். பல நடிகைகள் அதற்காக லிஸ்டில் வைத்திருந்த இடத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இருந்துள்ளார்.
சென்சேஷ்னல் நடிகையாக தெலுங்கு சினிமாவில் இருந்து வரும் ராஷ்மிகா யார் படமாக இருந்தாலும் சரி தன் இஷ்டப்படி தான் இருப்பேன் என்று கூறி தற்போது கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றியுள்ளார். ஆரம்பத்தில் முதல் இரு படங்களில் மார்க்கெட்டை பிடித்த ராஷ்மிகா தற்போது முன்பு போல் இல்லை என்று தயாரிப்பாளர் இடையில் கூறப்படுகிறது.
மேலும் இயக்குநர் சங்கர் முதலில் கியாரா அத்வானிக்கு பதில் அவரைத்தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாராம். இந்த காரணங்களால் கடுப்பான சங்கர் கடையில் முடிவை மாற்றி கியாரா அத்வானி, அஞ்சலியை கமிட்டாக்கி விட்டாராம்.