விஜய் தந்தையால் தான் பிரம்மாண்ட இயக்குநர் உருவானாரா? வைரலாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்று பேர் பெற்றவர் இயக்குநர் சங்கர். ஜெண்டில் மேன் படத்தில் ஆரம்பித்த சூப்பர் ஹிட் வெற்றி காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் பாய்ஸ் போன்ற படங்கள் பிரம்மாண்டத்தை ஆரம்பித்தது.
இதையடுத்து, அந்நியன், சிவாஜி, எந்திரன்,நண்பன் போன்ற படங்களால் வெற்றி பிரம்மாண்ட இயக்குநர் என்ற பேரும் பெற்றார். தற்போது இந்தியன் 2 படத்தின் வேலைகள் தள்ளிச் சென்றுள்ளதையடுத்து, தெலுங்கு நடிகர் ராம் சரண் படத்தினை இயக்கி வருகிறார். இந்நிலையில் சங்கர் இந்த அளவிற்கு உருவாக நடிகர் விஜய்யின் தந்தைதான் காரணம்.
இயக்குனர் ஷங்கர் ஆரம்பகாலத்தில் இயக்குனர் S.A.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர். இது எந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
