ராக்கி பாய் தான் வேண்டும்... 1000 கோடிக்கு ஆசைப்பட்டு தமிழ் நடிகர்களை ஒதுக்கிய பிரம்மாண்ட இயக்குனர்..
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதுமட்டுமின்றி RC 15 படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த இரு படங்களை தவிர்த்து ரன்வீர் சிங்குடன் அந்நியன் படமும் கைவசம் வைத்துள்ளார்.
ஆனால், இப்படம் ட்ராப் ஆகிவிட்டது என்று இதனால், அதே தயாரிப்பாளருடன் வேறொரு புதிய படத்தை ஷங்கர் இயக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகிறதாம். சு. வெங்கடேசன் எழுதியுள்ள வேள்பாரி புத்தகத்தை தழுவி இப்படம் எடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இப்படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்கப்போகிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சூர்யா இப்படத்தில் நடிக்கவில்லை என்றும், கே.ஜி.எப் யாஷ் தான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்களை வைத்து படமெடுக்காமல் கன்னட நடிகரை வைத்து ஷங்கர் படம் இயக்கப்போகிறாரே என்று பல விமர்சனங்களும் எழுந்துள்ளன.