மொட்டை அடிச்சா கேன்சரா!! நடிகை சாந்தி பிரியாவின் தற்போதைய நிலை.

Indian Actress Tamil Actress Actress
By Edward Apr 27, 2025 02:30 PM GMT
Report

சாந்தி பிரியா

கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி மிகப்பெரிய இடத்தினை 80களில் பெற்றவர் நடிகை சாந்தி பிரியா. முன்னணி நடிகையாக திகழ்ந்த சாந்தி பிரியா, நடிகர் சித்தார்த் ரேவை காதலித்து திருமணம் செய்து இரு மகன்களை பெற்றெடுத்தார்.

2004ல் கணவர் சித்தார்த் ரேவ் மாரடைப்பால் மரணடைந்தப்பின், தொலைக்காட்சி நிகழ்ச்சி, டான்ஸ் நிகழ்ச்சிகள் என்று பங்கேற்று வந்த சாந்தி பிரியா, சமீபத்தில் ஓடிடியில் வெளியான பேட் கேர்ள் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

மொட்டை அடிச்சா கேன்சரா!! நடிகை சாந்தி பிரியாவின் தற்போதைய நிலை. | Shanthi Priya Explain Clearly Shaving Her Head

மொட்டை

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாந்தி பிரியா, மொட்டை அடித்து அதோடு எடுத்த மாடர்ன் லுக் போட்டோஷூட்டினை பகிர்ந்துள்ளார். இதுபற்றி பேசிய சாந்தி பிரியா, எனக்கு உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். மொட்டையடிக்க தோன்றியது அடித்துக்கொண்டேன்.

பெண்கள் எப்போதும் இரு ரூல்ஸை ஃபாலோ செய்ய வேண்டும், நம்மை நாமே குண்டுக்குள் அடைத்துக்கொள்கிறோம், நான் என்னைவிடுவித்துக்கொண்டேன். மொட்டை அடிக்கும் போது சந்தேகம் இருந்தது.

படவாய்ப்புகள் கிடைக்குமா, சினிமாத்துறையில் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தேன். ஆனால் மொட்டை அடித்தப்பின் தான் நிம்மதியாக இருப்பதை உணர்ந்தேன்.

மொட்டை அடிச்சா கேன்சரா!! நடிகை சாந்தி பிரியாவின் தற்போதைய நிலை. | Shanthi Priya Explain Clearly Shaving Her Head

மொட்டை அடிச்சா கேன்சரா

ஒரு பெண் மொட்டையடித்தால் பொதுவாக வேறுமாதிரி பேசுவார்கள். மனநிலை பிரச்சனை என்றும் குஊறுவார்கள். கொஞ்சம் பயம் இருந்தது, மொட்டை எடுத்தப்பின் என்ன நடந்தால் என்ன? என் முடிவை நான் மாற்றமுடியாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

மொட்டை அடித்தால் கேன்சரா என்ற கேள்வியும் எழுந்தது, குறிப்பாக பாலிவுட்டில் பலரும் நான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்து கொண்டதாக தெரிவித்தனர். தென்னிந்தியாவில் இருந்து வந்தப்பெண் என்பதால், அப்படியும் நினைத்து கொண்டனர்.

நான் யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை, அவரவர் விருப்பத்திற்கு என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன் என்று சாந்தி பிரியா தெரிவித்துள்ளார்.