அதுக்கு மறுத்ததால் கட்டாயப்படுத்தி என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்.. கவுண்டமணி மீது நடிகை குற்றச்சாற்று
90 களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஷர்மிலி. இவர் பல படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடியுள்ளார். சமீபத்தில் ஷர்மிலி வனிதா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துள்ளார்.
அதில் அவர், நான் பாடல்களுக்கு நடனமாடும் பெண்ணாக என்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினேன். அந்த சமயத்தில் கவுண்டமணி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் வயது வித்தியாசம் காரணமாக நடிக்க மறுத்துவிட்டேன். அதுமட்டுமின்றி எனக்கு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வராது.
ஒரு படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க என்னை புக் செய்துவிட்டனர். அந்த படத்திற்கு பிறகு கவுண்டமணி உடன் இரண்டு படம் நடிக்க சொன்னார்கள் நானும் சரி என்று சொல்லி நடித்தேன். சில படங்களில் அவர் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்
நான் நேரடியாக அவரிடம் சென்று இனி உங்களுடன் நடிக்க மாட்டேன் பட வாய்ப்புகளை நானே பாத்து கொள்கிறேன் என்று கூறினேன்.
அப்போதில் இருந்து கவுண்டமணி எனக்கு வரும் பட வாய்ப்புகளை இல்லாமல் செய்துவிட்டார். என்னுடைய சினிமா வாழ்க்கை மோசமாக போக அவர் தான் காரணம் என்று கவுண்டமணி மீது ஷர்மிலி புகார் அளித்துள்ளார்.