என் வாழ்க்கையே போய்டும்..குஷ்பூவை பற்றி பேசிய மனைவி..சண்டைப்போட்ட பிரபு!!இயக்குநர்..

Prabhu Sivaji Ganesan Gossip Today Kushboo
By Edward Aug 02, 2025 01:30 PM GMT
Report

பிரபு - குஷ்பூ

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாக 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் பிரபு. நடிகை குஷ்பூவுடன் ஜோடியாக நடித்தபோது அவருடன் காதலில் இருந்ததாகவும் சிவாஜி அதில் தலையிட்டு பிரித்ததாகவும் செய்திகள் அப்போதைய பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது.

தற்போது பிரபு - குஷ்பூ விவகாரம் குறித்து இயக்குநர் வி சேக பிரபு பகிர்ந்துள்ளார். நான் சிவாஜியின் தீவிரமான ரசிகர், ஒருமுறை அவர்களது வீடில் விருந்து வைத்தார்கள்.

என் வாழ்க்கையே போய்டும்..குஷ்பூவை பற்றி பேசிய மனைவி..சண்டைப்போட்ட பிரபு!!இயக்குநர்.. | Shekhar Said Prabhu Fought With Wife For Khushboo

அதில் நானும் கலந்து கொண்டேன், அங்கு விஜயகாந்தும் வந்திருந்தார். அப்போது பிரபுவிடம் விஜயகாந்த், இவரை குடும்ப படங்களைவிட்டு வெளியே வாங்க என்று சொன்னால் கேட்க மறுக்கிறார்.

அதற்கு பிரபு, என்னை வைத்து ஒரு படம் செய்யலாம் என இருக்கிறார் என்றார். பின் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். சிவாஜியின் மனைவி என்னிட வந்து, நான் உங்கள் படங்களின் தீவிர ரசிகை என்று சொன்னார்.

என் வாழ்க்கையே போய்டும்..குஷ்பூவை பற்றி பேசிய மனைவி..சண்டைப்போட்ட பிரபு!!இயக்குநர்.. | Shekhar Said Prabhu Fought With Wife For Khushboo

என் வாழ்க்கையே போய்விடும்

பிரபுவின் மனைவி என்னிடம் வந்து நீங்கள் எனக்கு அண்ணன் மாதிரி, உங்கள் இயக்கத்தில் பிரபு நடிக்க வேண்டும் என்று சொன்னதே நான் தான், ஆனால் ஒன்றேவொன்று, இப்படத்தில் அவருக்கு குஷ்பூ ஜோடியாக வேண்டாம், ஏனென்றல் அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பேசுகிறார்கள். குஷ்பூவை ஜோடியாக போட்டால் என் வாழ்க்கையே போய்விடும் என்று கூறினார்.

எனக்கும் அது சரி என்று பட்டது, அதனால் அப்படத்தில் பிரவுக்கு ஜோடியாக மீனாவை ஃபிக்ஸ் செய்தேன். இதனால் பிரபு கோபித்துக்கொண்டார். அந்த படமும் நடக்கவில்லை. அதுமட்டுமின்றி வீட்டுக்கு சென்று அவர் தன் மனைவியிடம், ஏன் குஷ்பூவை பற்றி அங்கெல்லாம் பேசுற என்று சண்டைப்போட்டுள்ளார். எப்படியோ என்னால் ஒரு குடும்பம் உடையாமல் இருந்ததை நினைத்து சந்தோஷம் தான் என்று இயக்குநர் வி சேகர் தெரிவித்துள்ளார்.

பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் இயக்குநர் வி சேகர் பகிர்ந்து கொண்டதை தான் இங்கு பதிவிட்டு இருக்கிறோமே தவிர, விடுப்பு தளத்திற்கு அவர் கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.