உடல் ரீதியாக விமர்சிக்கப்பட்ட நடிகை.. இன்று பல கோடி சொத்துக்கு அதிபதி

Bollywood Actress Shilpa Shetty Net worth
By Bhavya Nov 03, 2024 07:30 AM GMT
Report

ஷில்பா ஷெட்டி

சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் பல அவமானங்களையும் தடைகளையும் சந்தித்து அதை பற்றி பெரிதும் கவலை கொள்ளாமல் திறமையாலும் நம்பிக்கையாலும் இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி.

உடல் ரீதியாக விமர்சிக்கப்பட்ட நடிகை.. இன்று பல கோடி சொத்துக்கு அதிபதி | Shilpa Shetty Growth In Cinema

இந்நிலையில், ஷில்பா ஷெட்டி அவரது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

விமர்சிக்கப்பட்ட நடிகை

அதில், நான் என் சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில், தயாரிப்பாளர்களிடமிருந்து பல நிராகரிப்புகளை எதிர்கொண்டு உள்ளேன். நான் சினிமாவில் நடிக்க வந்த தொடக்கத்தில் நான் கருமையாகவும், ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தபடியே நடிப்பு தொழிலுக்கு வந்தேன்.

உடல் ரீதியாக விமர்சிக்கப்பட்ட நடிகை.. இன்று பல கோடி சொத்துக்கு அதிபதி | Shilpa Shetty Growth In Cinema

இதனால் நிறைய ஏமாற்றத்தையும், தோல்வியையும் சந்தித்தேன். அது மட்டுமில்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் என்னிடம் பாகுபாடு காட்டியது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.

உடல் ரீதியாக விமர்சிக்கப்பட்ட நடிகை.. இன்று பல கோடி சொத்துக்கு அதிபதி | Shilpa Shetty Growth In Cinema

மிகவும் கஷ்டப்பட்டேன் ஹிந்தி பேச தெரியாமல் கேமரா முன் பதட்டமாக நின்று கொண்டிருந்தேன். இதனால் பல தயாரிப்பாளர்கள் என்னை நிராகரித்தார்கள்.

ஆனால், என் முயற்ச்சியை நான் கைவிட வில்லை அதனால் தான் இன்று முன்னணி நடிகையாக வலம் வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

தற்போது, ஷில்பா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவராகவும் ரூ. 100 கோடி மதிப்பில் ஆடம்பர பங்களா மற்றும் ஜெட் விமானம் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார்.