கணவர் சிறையில் இருக்கும் நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி எங்கு சென்றார் தெரியுமா? வைரல் வீடியோ..

By Edward Aug 18, 2021 10:50 AM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் நடிகர் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்து அறிமுகமாகினார். இதையடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் பாலிவுட்டில் பிஸியாக இருந்து வந்தார்.

சமீபத்தில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா அந்தமாதிரியான படங்களை நடிகைகள் கூட்டி வந்து நடிக்க வைத்து வீடியோவை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்மூலம் பல லட்சங்கள் சம்பாதித்து இருப்பதாகவும் கூறி நடிகைகளின் புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சில மாதங்களாக பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். தற்போது கணவர் சிறையில் இருக்கும் நிலையில் மீண்டும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாராம். அங்கு கேரவனில் இருந்து வெளியேறி வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.