இது IPL ரூல்ஸ்-னு தெரியாதா? சிவம் துபேவை அசிங்கப்படுத்திய கே எல் ராகுலின் பின்னணி...

Rohit Sharma Sri Lanka Cricket KL Rahul Indian Cricket Team Shivam Dube
By Edward Aug 04, 2024 12:30 PM GMT
Edward

Edward

in Cricket
Report

இந்திய கிரிக்கெட் அணியினர் இலங்கை சுற்றுப்பயணம் சென்று 3 டி20 போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் ஆட சென்றுள்ளனர். 3 ட்20 போட்டிகள் ஆடிய இந்திய அணி, இலங்கை அணியை தோல்வியடை செய்து தொடரை கைப்பற்றியது. அதேபோல் சில தினங்களுக்கு முன் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் 230 ரன்கள் அடித்து சமம் செய்தனர்.

இந்த போட்டியில் 5 ஆண்டுகள் கழித்து இலங்கையில் ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு பெற்று ஆடிய சிவம் துபே, நன்றாக பந்து வீசி முதல் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான விக்கெட்டையும் எடுத்தார்.

இது IPL ரூல்ஸ்-னு தெரியாதா? சிவம் துபேவை அசிங்கப்படுத்திய கே எல் ராகுலின் பின்னணி... | Shivam Dube Trolled Kl Rahul For Wrong Wide Review

14வது ஓவரில் விக்கெட் எடுத்த அதே ஓவரில் பந்து வீசும் போது பேட்ஸ்மேன் காலில் பேடை உரவி கொண்டு பந்து சென்றுள்ளது. பந்து பேட்டில் பட்டதாக நினைத்த சிவம் துபே அப்பில் செய்திருக்கிறார். ஆனால் அம்பயர் வைட் கொடுத்து அதிர்ச்சியளித்தார்.

பின் சிவம் துபே சத்தம் கேட்டதாகவும் வைடாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறி ரோஹித் சர்மாவிடம் கூறியிருக்கிறார். ஐபிஎல் விதி ஒன்றை ஒருநாள் போட்டியில் இருப்பதாக நினைத்து அம்பயிடம் ரிவ்யூ கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதற்கு கே எல் ராகுல், அந்த ஐபிஎல் விதி எல்லாம் ஒருநாள் போட்டியில் இல்லை என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி சிவம் துபேவை கிண்டல் செய்தும் வந்தனர். அதன்பின் ஆடிய இந்திய அணியினர் ரன்கள் குவிக்க தடுமாறினர். அந்த சமயத்தில் சிவம் துபே நன்றாக விளையாடியும் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின் போட்டி கடைசியில் டை-யில் முடிந்துள்ளது.

Gallery