ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் ஷிவாங்கி..என்ன இப்படி மாறிட்டிங்க

Sivaangi Krishnakumar
By Kathick Jun 05, 2022 11:00 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமானவர் பாடகி ஷிவாங்கி. இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய ஷிவாங்கி, தனக்கென்று தனி மக்கள் மத்தியில் பிடித்தார்.

மேலும், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளி, பின்னணி பாடகி, வளர்ந்து வரும் நடிகை என பல விஷயங்களில் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த டான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி அவ்வப்போது சில புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது கப்பலில் இருந்து ஹீரோயின் போல் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..