துல்கர் சல்மானுடன் ரொமான்சில் ஷிவாங்கி.. கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்
shivangi
super singer
cooku with comali
dulquer salman
By Kathick
கடந்த இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 துவங்கியுள்ளது. இதில் 10 போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில், ராகுல் தாத்தா மற்றும் நடிகர் மனோபாலா இருவரும் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளனர்.
இதை தொடர்ந்து இந்த வாரம் நடைபெறவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக பிரபல நடிகர் துல்கர் சல்மான், அதிதி ராவ் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோர் வந்துள்ளனர்.
அப்போது, ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சி ஒன்றை துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துள்ளார் ஷிவாங்கி. ஆனால், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷிவாங்கியை கலாய்த்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..