கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பிக்பாஸ் நடிகை? அதுவும் இவருடன் ரொமான்ஸாம்...

vikram vijaysethupathi shivaninarayanan kamlhaasan logeshkanagaraj
By Edward Aug 21, 2021 03:07 AM GMT
Report

இந்திய சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த 62 வருடங்களாக சுமார் 230 படங்களுக்கும் மேல் நடித்து வரும் கமல் சமீபத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பகத் பாசல் இணைந்துள்ளனர். மேலும் நடிகர் ஜெயராம் மகன் நடிகர் காளிதாஸ் ஜெயராம் கமலின் மகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். பகத் பாசல் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுள்ளாராம்.

தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஷூட்டிங்கை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.