சிவகார்த்திகேயனா? வேண்டவே வேண்டாம்! பார்த்தாலே ஓட்டம் பிடிக்கும் கமல் மகள் ஸ்ருதி..
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து 3, 7 ஆம் அறிவு உள்ளிட்ட பல படங்களில் நடித்து கொடுக்கட்டி பறந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் செப்டம்பர் 9ல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் வரும் காலங்களில் லாபம் படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்தாலே வேண்டவே வேண்டாம் என்று தூக்கி எறிந்து பேசியுள்ளாராம்.
அதற்கு காரணம் என்ன என்று பிரபல யூடியூப் விமர்சகர்கள் கூறியுள்ளனர். கமல் பற்றி மேடையில் சிவகார்த்திகேயன் தவறாக பேசியதாக கூறி சில வருடங்களுக்கு முன் மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் துறத்திய செய்தி வைரலானது.
இந்த காரணத்தால் தான் சிவகார்த்திகேயனுடன் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம் நடிகை ஸ்ருதி ஹாசன். ஆனால், கமலால் தான் சிவகார்த்திகேயனுக்கு அப்படி நடந்தது, சிவகார்த்திகேயன் தான் ஸ்ருதிஹாசனுடன் நடிக்க மாட்டேன் என்று கூறவேண்டும் என்று கூறி வருகிறார்களாம்.