6 மாதம் மன உளைச்சல்! உளவியல் பட்டப்படிப்பை நிறுத்தி நடிக்க வந்த கமல் மகள் ஸ்ருதிஹாசன்

laabam kamalhaasan shrutihaasan psychology
By Edward Sep 09, 2021 08:27 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக தந்தை படமான உன்னை போல் ஒருவன் படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகியவர் ஸ்ருதி ஹாசன். கமல் மகளாக பிரபலமான பின் 3 மற்றும் 7 ஆம் அறிவு படத்தில் நடித்த அதன் வெற்றி மூலம் புகழ் பெற்றார். அப்படங்களின் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிரபலமானார்.

தற்போது லாபம் படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கல்லூரி படக்கும் போது ஸ்ருதிஹாசன் 6 மாதங்கள் மன உளைச்சலில் இருந்ததாக கூறியுள்ளார். பள்ளிப்படிப்பு முடித்தபின் உளவியல் பட்டப்படிப்பு படித்து வந்தேன்.

சில காலங்களில் படங்களில் கமிட்டாகி நடிக்கவும் பாடவும் ஆரம்பித்தேன். இதற்கிடையில் என் தோழிகள் என்னிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறினார்கள். இதனால் தோழிகள் கூறியதை கேட்டு ஆறு மாதங்கள் மனநல மருத்துவரின் ஆலோசனையை கேட்டு வந்தேன்.

உளவியல் பட்டப்படிப்பை படித்த நானே இப்படியொரு நிலைக்கு தள்ளபட்டேன். மேலும், அது தொடர்ந்து இருந்ததால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். அப்படி நான் பாதியில் வெளியேறாமல் இருந்திருந்தால் தற்போது உளவியல் படிப்பை முடித்து மருத்துவராகி இருப்பேன் என்றும் கூறியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.