பொம்மை செய்த அமானுஷ்ய சம்பவம்!! பூஜை செய்து அகற்றிய ஸ்ருதி ஹாசன்..

Shruti Haasan Tamil Actress
By Jai Nov 15, 2026 06:26 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் காலெடி எடுத்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் தன் வீட்டில் இருந்த பொம்மை தானாக இடம்பெயர்ந்தது குறித்து பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது..

ஸ்ருதி ஹாசன்

நடிகர் கமல் ஹாசனின் மகளாகவும் சிறுமி வயதில் பாடகியாகவும் அறிமுகமாகி மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.

பொம்மை செய்த அமானுஷ்ய சம்பவம்!! பூஜை செய்து அகற்றிய ஸ்ருதி ஹாசன்.. | Shruti Haasan Open Up About Her House Toy Issues

7ஆம் அறிவு, 3 உள்ளிட்ட படங்களில் நடித்து அறிமுகமாகிய ஸ்ருதி, அப்பாவின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் பாடி முன்னணி பாடகியாகவும் அறிமுகமாகினார்.

அதன்பின் டாப் நடிகையாகவும் முன்னணி பாடகியாகவும் திகழ்ந்த ஸ்ருதி, ஒருசில காதல் தோல்விகளை சந்தித்து வந்தார்.

தற்போது பெற்றோரைவிட்டு தனியாக வாழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன், தான் தன் வீட்டில் அனுபவித்த அமானுஷ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அமானுஷ்ய சம்பவம்

அதில், மும்பையிலுள்ள தன்னுடைய வீட்டில், இருக்கும் ஃபியோனா என்று பெயர்சூட்டப்பட்ட மனித உருவ பொம்மை அவ்வப்போது தானாகவே வேறு இடங்களுக்கு நகர்ந்து சென்றதாகவும், இதனால் அச்சயமடைந்த நான், ஆஞ்சநேயர் சாலீசா பாடலை ஒலிக்கவிட்டு, கையில் உப்பை வைத்து வழிப்பட்டேன்.

அந்த பொம்மையை பிரித்து அகற்றி வீட்டிலிருந்த தீய சக்திகளை ஒழிப்பதற்கான சடங்குகளை செய்தப்பின் வீடு அமைதியாக இருந்தது என்று தன்னுடைய திகில் சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.