அம்மா அப்பா விவாகரத்திற்கு பின், அது மிகவும் கடினம்.. ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்

Kamal Haasan Shruti Haasan Actress
By Bhavya Apr 26, 2025 01:30 PM GMT
Report

ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன். பாடகி, இசையமைப்பாளர், நாயகி என பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசன் இசை துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாக கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

அம்மா அப்பா விவாகரத்திற்கு பின், அது மிகவும் கடினம்.. ஸ்ருதிஹாசன் ஓபன் டாக் | Shruti Haasan Open Up About Parents Divorce

ஓபன் டாக் 

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ஸ்ருதியிடம் நடிகர்கள் குடும்பத்தில் இருந்து வந்ததால் மிகவும் எளிமையாக உங்களுக்கு அனைத்தும் கிடைத்து விட்டதாக நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? என்று கேள்வி வர அதற்கு ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், "கண்டிப்பாக இல்லை. நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் என் வாழ்க்கையில் நடந்தவற்றை குறித்து பலருக்கும் தெரியாது.

என் அப்பாவும், அம்மாவும் விவாகரத்து பெற்று பிரிந்த பின் என் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அப்பாவை பிரிந்து அம்மாவுடன் நாங்கள் சென்ற பின் எங்கள் வாழ்க்கை நினைத்தது போன்று இல்லை" என்று தெரிவித்துள்ளார்.         

அம்மா அப்பா விவாகரத்திற்கு பின், அது மிகவும் கடினம்.. ஸ்ருதிஹாசன் ஓபன் டாக் | Shruti Haasan Open Up About Parents Divorce