கல்யாணம் மீது நம்பிக்கை இல்ல..குழந்தையை தத்தெடுக்க தயார்!! ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்..
டாப் நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், சமீபத்திய பேட்டியொன்றில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, திருமணக் கோட்பாடுகள் குறித்து பேசியுள்ளார்.

கல்யாணம் மீது நம்பிக்கை இல்ல
அதில், நான் ஒருமுறை திருமணத்தின் மிக நெருங்கிய கட்டம் வரை சென்றேன், ஆனால் அந்த அனுபவம் எனக்கு பயத்தை அளிக்கவில்லை. வாழ்க்கையில் நல்லதொரு துணை அமைவதை நான் மிகவும் விரும்புகிறேன். ஆனால் சமூகத்தின் வழக்கமான சட்டகத்திற்குள் என்னை அடைத்துக் கொள்ள ஒருபோதும் விரும்பியதில்லை.
ஒரு துணையுடன் இணைந்து வாழ்வதும், தினமும் ஒருவரை ஒருவர் நேசிப்பதும் தான் முக்கியமே தவிர, திருமணத்திற்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் அல்ல. ஒரு தாளில் கையெழுத்திடுவதன் மூலம் மட்டுமே ஒரு பந்தத்தை உறுதிப்படுத்திட வேண்டிய அவசியமில்லை.

திருமண விழாக்களுக்கு செய்யப்படும் அநியாயமான செலவுகள், ஆடம்பரக் கொண்டாட்டங்கள், யாரை திருப்திப்படுத்துவதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்கிறோம் என்று புரியவில்லை. ஆடம்பரமாக செலவு செய்பவர்களை குறை சொல்லவில்லை என்றாலும் அப்பணத்தை ஆதரவற்ற தொண்டு நிறுவனங்களுக்கு தானமாக வழங்கலாம்.
திருமணத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லாவிட்டாலும், தாய்மை அடைவதில் எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. எதிர்காலத்தில் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்கு அல்லது உயிரியல் ரீதியாக தாயாவதற்கும் நான் தயாராக இருக்கிறேன். பிரபல கலைஞர் சாந்தனு ஹசாரிகாவுடனான 4 ஆண்டுகால உறவு 2024ல் முடிவுக்கு வந்தப்பின், தற்போது தான் தனிமையாக இருக்கிறேன். தன்னுடைய கலைப் பயணம், சொந்த வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தி வருவதாக ஸ்ருதி ஹாசன் ஓபனாக பேசியுள்ளார்.