அப்பாக்கு கொரோனா! காதலருடன் தனிமைப்படுத்தப்பட்ட கமல் மகள் ஸ்ருதி ஹாசன்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பின்னணி பாடகியாக கமலின் மகளாக அறிமுகமாகி பின் 3, 7ஆம் அறிவு போன்ற படங்கள் மூலம் நடிகையாக களமிரங்கினார். பின் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று டாப் நடிகையாக தமிழ், தெலுங்கு சினிமாவில் ஜொலித்தார்.

இடையில் தந்தையை போலவே காதலில் சிக்கி தோல்வியையும் கண்டார். தற்போது டூடுல் கலைஞரான சாந்தனு என்பவருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை தனியாக வாழ்ந்து வருகிறார். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று வந்ததால் கொரோனா வைரஸ் உறுதியானது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 10 நாட்கள் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 சீசனை யார் வழிநடத்துவது என்ற கேள்வி எழும் நிலையில் ஸ்ருதி ஹாசன் தான் என்று சிலர் கூறி வருகிறார்கள். தந்தைக்கு கொரோனா உறுதியானதை கண்டுகொள்ளாமல் ஸ்ருதி அவர் விருப்பம் போல் இணையத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்