நான் அந்த சர்ஜெரி செய்திருக்கிறேன்..மும்பையில் பங்களா.. நடிகை ஸ்ருதி ஹாசன் ஓப்பன் டாக்..

Shruti Haasan Tamil Actress Actress
By Edward Nov 11, 2024 03:30 PM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்ப்போது இவர் சலார் 2, சென்னை ஸ்டோரி போன்ற படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.

நான் அந்த சர்ஜெரி செய்திருக்கிறேன்..மும்பையில் பங்களா.. நடிகை ஸ்ருதி ஹாசன் ஓப்பன் டாக்.. | Shruti Haasan Reply About Gossips Face Surgery

சமீபத்தில், காதலரை பிரேக்கப் செய்து தனியாக வாழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் உரையாடுவார். சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் கிசுகிசுக்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.

கிசுகிசுக்களுக்கு பதில் 

முக அழகிற்காக சர்ஜெரி செய்திருக்கிறார் என்ற கேள்விக்கு, ஆமாம் நான் செய்திருக்கிறேன். எல்லோரும் அதை செய்கிறார்கள், ஆண்களும் செய்கிறார்கள். நீங்கள் அதை கவனிக்கவில்லை என்றால் காந்தக்கண்ணாடி போட்டுப்பாருங்கள்.

இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் என் உடலுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை விரும்பி செய்கிறேன். நான் அதை விளம்பரப்படுத்தவில்லை. இது ஃபேஸ் சர்ஜெரி இல்லை, அது பிசினஸ் கிடையாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

நான் அந்த சர்ஜெரி செய்திருக்கிறேன்..மும்பையில் பங்களா.. நடிகை ஸ்ருதி ஹாசன் ஓப்பன் டாக்.. | Shruti Haasan Reply About Gossips Face Surgery

மேலும் மும்பையில் பல கோடி மதிப்புள்ள பங்களா ஒன்றை கட்டி வருகிறார் என்ற கேள்விக்கு, மும்பையில் ஒரு பங்களாவோட மதிப்பு எவ்வளவுன்னு உங்களுக்கு தெரியுமா? என்று கூறியிருக்கிறார்.

தன் பெயரில் ஒரு ஃபேஷன் பிராடெக்ட் உருவாக்க திட்டமிட்டுள்ளார் என்பதற்கு, என் விருப்பம்தான் ஆனால் இப்போது அந்த எண்ணம் இல்லை. இன்னும் சில ஆண்டுகளுக்கு திருமணம் செய்யமாட்டேன் என்றும் கூறியிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.