சப்போர்ட் செய்த இயக்குநர்! சாகும் நிலையில் கூட கண்டுகொள்ளத கமல் மகள் ஸ்ருதிஹாசன்..
தமிழ்சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி வாரிசு நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பால் படவாய்ப்பினை பெற்று நடித்து வருகிறார். தற்போது லாபம் படத்தில் நடித்து வரும் ஸ்ருதி பல பிரச்சனைகளை உருவாக்கி தன் பெயரை கெடுத்து கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
சமீபகாலமாக ஸ்ருதிகாசனுக்கு சப்போர்ட்டாக இருந்த இயக்குனர் ஒருவர் மூளைச்சாவு அடைந்து மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளபோதும் ஸ்ருதி ஹாசன் அதைப்பற்றி தற்போதுவரை போன் செய்து கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை என்பதுதான் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
அடுத்த முதல்வர் என ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் படும் கமலஹாசனின் மகள் தான் ஸ்ருதிகாசன். பல்வேறு காதல் சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் அடுத்ததாக தமிழில் வெளியாக உள்ள திரைப்படம் லாபம். இந்த படத்தின் போது ஸ்ருதிகாசன் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
திடீரென படப்பிடிப்பிலிருந்து பாதியில் கிளப்பி விடுவது, விஜய் சேதுபதி மீது தேவையில்லாத பழியை சுமத்துவது என இருந்த பெயரையும் கெடுத்துக் கொண்டார். ஆனால் அப்போது கூட லாபம் படத்தின் இயக்குனரான எஸ்பி ஜனநாதன் ஸ்ருதிகாசன் மீது எந்த தவறும் இல்லை எனவும், அவர் கிளம்பும் போது என்னிடம் சொல்லி விட்டுத்தான் சென்றார் எனவும் அவருக்கு சப்போர்ட் செய்து அந்த பிரச்சனையில் ஸ்ருதி மாட்டாமல் தப்பிக்க வைத்தார்.
ஆனால் தற்போது ஜனநாதன் திடீரென மூளைச்சாவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நிலையிலும் இதுவரை ஸ்ருதிகாசன், என்ன ஆனது என ஒரு வார்த்தைகூட கேட்கவில்லையாம். இதுதான் தற்போது பெரிய பிரச்சனையாக கிளம்பியுள்ளது.
ஆனால், இதுவரை அவரை பற்றி கேட்கவோ பார்க்கவோ நடிகை ஸ்ருதிஹாசன் செய்யவில்லையாம். சப்போர்ட் பண்ணவரையே மறக்கிறார்கள் என்று ரசிகர்கள் பிரச்சனையை ஆரம்பித்தும் வருகிறார்கள்.