எத்தனையாவது Boy Friend என கேட்கிறார்கள்.. வருத்தத்துடன் பேசிய கமல் மகள் ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு பெரிதும் அறிமுகம் தேவையில்லை. கமல் ஹாசனின் மகளான இவர் தனது இளம் வயதிலேயே சினிமாவில் எண்ட்ரி கொடுத்து சென்சேஷனல் ஆனார்.
சூர்யா, விஜய், அஜித் என முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து நடித்தார். மேலும் தற்போது ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதி ஹாசனின் காதல் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை எழுந்துள்ளன.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தனது காதல் முறிவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
"நான் ஒரு விஷயத்தை விட்டுட்டேன் என்றால், திரும்பவும் அது குறித்து வருத்தப்பட மாட்டேன். நான் என்னால் முடிந்த அளவுக்கு ட்ரை பண்ணினேன். ஆனால், மக்கள் இது உனக்கு எத்தனையாவது Boy Friend என்று கேட்கிறார்கள். உங்களுக்கு ஒன்னு புரிய மாட்டேங்குது. அது உங்களுக்கு வெறும் நம்பர். ஆனால், எனக்கு அத்தனை தடவை நான் தோற்றுப் போய் இருக்கிறேன் என்பதுதான். அதற்காக நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன்" என பேசியுள்ளார்.