காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்.. இதோ

Shruti Haasan
By Kathick Aug 11, 2022 10:30 AM GMT
Report

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் தற்போது சலார், பாலகிருஷ்ணா 107வது படம், சிரஞ்சீவியுடன் ஒரு படம் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். ஆனால், இதுவரை இருவரும் திருமணம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி ஹாசன் பதிவு செய்வார் அந்த வகையில் தற்போது தனது காதலன் சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இவர்களுடைய இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..


Gallery