காதலரை பிரியவில்லையாம்! புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த கமல் மகள் ஸ்ருதி..

lover kamalhaasan shrutihaasan tamilactress
By Edward Sep 03, 2021 05:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி வாரிசு நடிகையாக 7ஆம் அறிவு, 3 போன்ற வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ருதிஹாசன். இதையடுத்து தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

கடைசியாக நடிகர் விஜய்சேதுபதிபடத்தில் நடித்திருக்கும் ஸ்ருதி படங்கள் இல்லாமல் தன் காதலர் சாந்தனுவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் தான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று ரசிகர்களின் நேர்காணலில் கூறியிருந்தார்.

இதனால் சாந்தனு கழட்டிவிட்டுவிட்டாரோ என்று சமுகவலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காதலை தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.