உங்கள் உடம்பில் எத்தனை சர்ஜரி! கமல் மகள் ஸ்ருதியிடம் கேட்ட நபர்..

kamalhaasan shrutihaasan tamilactress plastic surgery
By Edward Apr 04, 2022 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். குழந்தை நட்சத்திரமாக தந்தை கமல் ஹாசன் படமான ஹேராம் படத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னணி பாடகியாகினார். அதன்பின் 3, 7 ஆம் அறிவு போன்ற ஹிட் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

இதையடுத்து தமிழ், தெலுங்கு என முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து பிஸி நடிகையாகினார். ஆரம்பத்தில் தன் முகத்தின் மூக்கினை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்தார் ஸ்ருதி. இதன் பின் அழகான தோற்றத்தில் காணப்பட உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் லைவ் சேட்டில் ரசிகர்களுடன் பேசியுள்ளார். அப்போது ஒரு நபர் உங்கள் உடலில் எந்தெந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஸ்ருதி இது உங்களுக்கு தேவையில்லாதது என்று பதிலடி கொடுத்துள்ளார். இப்படி பலர் ஸ்ருதிஹாசனிடன் தேவையில்லாத கருத்துக்களை கேட்டு வருவது சாதாரணமாகிவிட்டது.

GalleryGalleryGallery