சாரா டெண்டுல்கருடன் டேட்டிங்-ஆ!! 3 ஆண்டுகளா சிங்கிள் தான்!! முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில்..
சுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணியின் பிரின்ஸ் என்று கூறப்பட்டு வரும் சுப்மன் கில், தற்போது ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக விளையாடி வருகிறார். டாப் முதல் இடத்தில் இருக்கும் சுப்மன் கில் குறித்து சமீபகாலமாக வதந்தி செய்திகள் பரவி வருகிறது.
அதில் முன்னாள் கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கருடன் காதலில் இருப்பதாக செய்திகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜியோ மார்ச் கண்காட்சியில் சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இருவரும் இணைந்து பங்கேற்றது தான்.
சாரா டெண்டுல்கருடன் டேட்டிங்
சில நாட்களுக்கு முன் நடந்த போட்டியில் டாஸ் போடுவதற்காக சுப்மன் கில் வந்தபோது அவரிடம் வர்ணனையாளர் டேனி மாரிசன், சுப்மன் கில் அழகாக இருக்கிறீர்கள், விரைவில் திருமணம் செய்யப்போகிறீர்களா என்று கேட்க, அதற்கு வெட்கத்துடன், தற்போது திருமணம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து சாரா டெண்டுல்கர் சுப்மன் கில் ஆடும் போட்டியில் கலந்து கொண்டு வருவதை வைத்தும் காதல் வதந்தி செய்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து சுப்மன் கில் முதன்முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்.
சிங்கிள்
அதில், கடந்த 3 ஆண்டுகளாக நான் சிங்கிள் ஆகத்தான் இருக்கிறேன். ஆனால் பல்வேறு பெண்களுடன் இணைத்து தொடர்ந்து பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. சிலநேரங்களில் என் வாழ்க்கையில் சந்திக்காத, பார்த்திராத நபர்களுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறது.
சில நேரம் என்னுடன் இருக்கும் நபர்களை வைத்தும் வேறு ஒருவருடன் இணைத்து பேசுவார்கள். என் கிரிக்கெட் வாழ்க்கை மீது மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு ஆணில் 300 நாட்கள் பயணத்திலேயே இருக்கும் என் வாழ்வில்ம் காதலுக்கு இடமில்லை, தொடர்ந்து பயணித்து வருவதால் ஒருவருக்கு நேரம் கொடுப்பதே பெரிய விஷயம் தான்.
காதலிக்கும் போது நாம் அந்த நபருடன் அதிகநேரத்தை செலவிட வேண்டும், அதனால் அதற்கு வாய்ப்பில்லை என்று சுப்மன் கில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.