அப்பாஸுடன் அந்த கேரக்டர் என்ஜாய் பண்ணேன்..ஆனா..!! நடிகை மாளவிகா ஓப்பன் டாக்..
நடிகை மாளவிகா
உன்னைத்தேடி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், சீனு, லவ்லீ, வசூல் ராஜா எம்பிபிஎஸ், திருட்டு பயலே, சந்திரலேகா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த மாளவிகா, சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து 2009ல் இருந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறார்.
திருட்டு பயலே கேரக்டர்
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் திருட்டு பயலே படத்தில் எனக்கு சூப்பரான கேரக்டர். வில்லி கேரக்டரை நான் ரொம்ப என் ஜாய் பண்ணேன். அந்த படத்தில் அந்தமாதிரி காட்சியில் comfortable-ஆக ஏன் இருந்தேன் என்றால் அப்பாஸ் கூட இருந்தது.
எனக்கு நெருக்கமான நண்பர் தான் அப்பாஸ். நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து வைத்திருந்தோம், நிறைய பார்ட்டி பண்ணுவோம். வேறு யாராவது இருந்தால் எனக்கு Uncomfortable-ஆக இருந்திருக்கும்.