திரிஷாவுடன் நெருக்கமான காட்சி, அந்த நேரத்தில்.. நடிகர் சித்தார்த் ஓபன் டாக்

Siddharth Trisha Actors Tamil Actors
By Dhiviyarajan Feb 27, 2024 02:13 PM GMT
Report

நடிகர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், தயாரிப்பாளர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் சித்தார்த்.

இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சித்தா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவுடன் நெருக்கமான காட்சி, அந்த நேரத்தில்.. நடிகர் சித்தார்த் ஓபன் டாக் | Siddharth Talk About Romance Scene With Trisha

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சித்தார்த் திரிஷா உடன் ஆயுத எழுத்து படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், திரிஷா உடன் லவ்  சீன் இருக்கு, உனக்கு ஜாலி தான் என்று சொல்வார்கள். ஆனால் இயக்குனர் மற்றும் நடிகர்களின் வேலை இதைத்தாண்டி செயல்படும்.

ஆயுத எழுத்து படத்தின் ஷூட்டிங்கில் வெயிலில் சுட்டெரிக்கும் மணலில் படுக்க வைத்து, இந்த மூஞ்சியும் அந்த மூஞ்சியும் எந்த ஆங்கிளில் வைத்தால் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் என்று மணிரத்னம் யோசனை செய்துகொண்டு இருப்பார். மணி சார் எப்போதுமே பாஸ் என்று சித்தார்த் கூறியுள்ளார்.