சிம்புவுக்கு மாமனார் சூப்பர் ஸ்டார் தானா!! சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகை சிம்பு மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் - ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் கடந்த 15 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சிம்புவுடனான கற்பனை காதல் எப்படி இருக்கும் என்பதை கூறியிருக்கிறார்.
தன்னுடைய கற்பனை கதையில் சிம்புவும் நானும் பள்ளிப்பருவ காதலர்களாக இருக்கிறோம். என்னுடைய தந்தையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்க வேண்டும். சிம்புவின் அண்ணனாக உதயநிதி ஸ்டாலினும் இருக்க வேண்டும்.
அப்படி இருவரும் எங்கள் காதலை சேர்த்து வைக்க கல்யாணம் பண்ணி வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சுவாரஸ்யமாக கற்பனை நயத்தோடு கூறியிருக்கிறார்.
இதில் இருந்து சிம்பு இந்த நடிகையை கல்யாணம் செய்ய வேண்டும் என்றும் சூப்பர் ஸ்டார் மருமகன் சிம்புவா என்று கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.