விரைவில் இந்த நடிகையுடன் சிம்பு திருமணமா!! வெளியான புதிய தகவல்..

Silambarasan TRajendar Gossip Today Nidhhi Agerwal Tamil Actress
By Edward Sep 27, 2024 02:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் வரும் நடிகர் சிம்பு ஆரம்பத்தில் சில காதல் தோல்விகளை சந்தித்து வந்தார். அதிலிருந்து மீண்டும் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

விரைவில் இந்த நடிகையுடன் சிம்பு திருமணமா!! வெளியான புதிய தகவல்.. | Silambarasan Is Dating Young Heroine Soon Marriage

சிம்பு திருமணமா

இந்நிலையில், சிம்பு கிட்டத்தட்ட 41 வயதை கடந்த நிலையிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

சிம்புவின் தம்பி, தங்கை திருமணம் செய்து குழந்தைகளுடன் செட்டிலாகிவிட்ட நிலையில், முடிந்தவரை சீக்கிரம் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என டி ராஜேந்தர் மற்றும் உஷா டி ராஜேந்தர் ஆகியோர், சிம்புவுக்கு பிடித்த மாதிரி ஒரு பெண்ணை வலை வீசி தேடிக் கொண்டிருக்கின்றனர்.

தங்களுடைய சொந்த பந்தத்தில் பெண்ணுக்காக இவர்கள் அணுகிய போது, நடிகர் என்பதாலும்... ஜாதகம் பொருந்தி வராததாலும் சில திருமண பேச்சுகள் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

விரைவில் இந்த நடிகையுடன் சிம்பு திருமணமா!! வெளியான புதிய தகவல்.. | Silambarasan Is Dating Young Heroine Soon Marriage

அதே நேரம் டி ராஜேந்தர், தன்னுடைய மகனுக்கு பிடித்த பெண்ணை தான் அவர் திருமணம் செய்து கொள்வார் என்பதில் உறுதியாக உள்ளார். எனவே கண்டிப்பாக சிம்புவுக்கு காதல் திருமணம் தான் என்பதை டி ராஜேந்தர் மும்முரமாக இருக்கிறாராம்.

நடிகை

ஏற்கனவே தன்னுடன் நடித்த நடிகை நிதி அகர்வாலுடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறி வதந்தி செய்திகள் பரவியது. அது சில காலம் ஓய்ந்தநிலையில் மீண்டும் இருவரின் காதல் குறித்த தகவல் லீக்காகியுள்ளது. சிம்புவும் நிதி அகர்வாலும் டேட்டிங் செய்து வருவது இரு குடும்பத்தினருக்கும் தெரியவர, பெற்றோர்கள் க்ரீன் சிக்னலும் தெரிவித்துள்ளார்களாம். இருவருக்கும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிம்புவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானால் மட்டுமே உறுதிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.