நடிகை சில்க் ஸ்மிதாவின் கடைசி படம் இதுதானாம்? தாராளத்தில் உச்சத்தில் சென்ற தருணம்!

heroine movie celebrity
By Jon Feb 13, 2021 03:23 AM GMT
Report

தமிழ் சினிமாவில் க்ளாமருக்கென்றே பேர் போன நடிகைகளில் முக்கியமானவராக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. முன்னணி நடிகர்களின் படத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமானார். இதையடுத்து சில்க் ஸ்மிதா க்ளாமர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அப்படிப்பட்ட சில்க் ஸ்மிதா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 1989 ஆம் ஆண்டு ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் வெளியான லயணம் படம்தானாம். கில்மா படமாக உருவாகி இருந்த இந்த படம் வசூலில் தாறுமாறு வெற்றி பெற்றதாம். அதுமட்டுமில்லாமல் லயனம் திரைப்படம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானதாக தகவல்கள் உள்ளன.

அந்தப் படம் தான் சில்க் சுமிதாவின் கடைசி திரைப்படமாக இருந்துள்ளது. அதன்பிறகு மதுவுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டார் சில்க் ஸ்மிதா என்றும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ளார். லயனம் படத்தில் நடித்த பிறகு சில்க் ஸ்மிதா குடியால் இறந்தது உண்மையா என்று சந்தேகத்தில் தான் இருக்கிறது.

ஆனால் அதே படத்தில் ஹீரோவாக நடித்த நடிகரும் சில்க் ஸ்மிதா இறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டதாக புதிய செய்திகள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து சில்க் ஸ்மிதாவுக்கும் அந்த நடிகருக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என சந்தேகமும் வருகிறது என்று கூறப்படுகிறது. சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படம் அனைவருக்கும் ஸ்பெஷல்தான்.


Gallery