ஆமா நீங்க யாரு..உங்களை தெரியாது!! விராட் கோலியிடம் மொக்கை வாங்கிய சிம்பு..
தக் லைஃப்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸ்யாகவுள்ளது தக் லைஃப் படம்.
இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது தக் லைஃப் படத்தின் சுகர் பேபி என்ற இரண்டாம் பாடல் வெளியாகி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
படத்தின் பிரமோஷனுக்காக மும்பை சென்றிருக்கும் தக் லைஃப் படக்குழுவினர், பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்டவர்கள் ஸ்டார் ஸ்போர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பேட்டியில் கலந்து கொண்டனர்.
சிம்பு - விராட் கோலி
அப்போது சிம்பு, விராட் கோலி இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்தபோது இவர்தான் அடுத்த சச்சினாக வருவார் என்று நண்பர்களிடம் சொன்னேன்.
அதற்கு அவர்களோ, அதெல்லாம் இல்லை, அவர் டொம்ப அக்ரெஸிவாக ஆடுகிறார், இன்னும் இரு ஆண்டுகளில் காணாமல் போய்விடுவார் என்று கூறினார்கள். அதன்பின் கோலி எந்த நிலைக்கு வந்தார் என்று அனைவருக்கும் தெரியும்.
நீங்க யாரு
ஒருமுறை அவரை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உடனே நான் என் மனதுக்குள், நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என கணித்திருந்தேன் பார்த்தீங்களா? என்று நினைத்து கொண்டே அவரிடம் சென்று, வணக்கம் நான் சிம்பு என்று கூறினேன். யார் நீங்க, உங்களை எனக்கு யார் என்றே தெரியாது என்று சொல்லிவிட்டு அப்படியே போய்விட்டார்.
எனக்கு இந்த அவமானம் தேவையா? என்று நினைத்தும் என்னையா யாருன்னு தெரியாதுன்னு சொன்னீங்க உங்களுக்கு தெரியவைப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். பின் விராட் கோலி பத்து பல பாடல் நீ சிங்கம் தான் பாடல் என்னை வெகுவாக கவர்ந்ததாக கூறியது மகிழ்ச்சியளிக்கிறது என்று சிம்பு சிரித்தபடி கூறியிருக்கிறார்.