கமல் தான் அப்படினா சிம்புவும் இப்படியா! தயாரிப்பாளரை கதறவிட்ட எஸ்டிஆர்..

simbu biggbossultimate pathuthala
By Edward Feb 28, 2022 04:19 AM GMT
Report

தமிழில் தன்னுடைய கம்பேக் படமாக அமைந்த மாநாடு மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தவர் சிம்பு. அப்படம் கொடுத்த வெற்றியை அடுத்து சிம்புவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது. அதன் முதல் படமாக கெளதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு படம் தான்.

படம் ஓரளவிற்கு நிறைவடைந்த நிலையில் சிம்பு பத்து தல படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் மஃப்டி படத்தின் ரீமேக்காக உருவாகவுள்ளது. படத்திற்காக சிம்பு தாடி அதிகமாக வைக்க வேண்டும் என்ற காரணத்தில் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் வெந்து தணிந்தது காடு படத்தின் 25 நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் நிலையில் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றுள்ளார். அப்படி படங்களை விட்டுவிட்டு சிம்பு இப்படி செய்திருப்பது இயக்குனரையும் தயாரிப்பாளர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஏற்கனவே படப்பிடிப்பிற்கு காலதாமதமாக வரும் பேரை எடுத்த சிம்பு இப்படி செய்கிறாரே என்றும் புலம்பி வருகிறார்கள்.