பல நடிகைகளுடன் காதல் தோல்வி!! சிம்புவின் திருமணம் குறித்த செய்தியை கூறிய தந்தை

Silambarasan T Rajendar TRajendar
By Edward Dec 11, 2022 07:42 AM GMT
Report

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் எஸ்டிஆர் என்று ரசிகர்களால் புகழப்பட்டு வருபவர் சிலம்பரசன் என்கிற சிம்பு. தந்தை டி ராஜேந்தரால் சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டு முன்னணி நடிகராக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

இடையில் நடிகை நயன் தாராவுடன் காதல், ஹன்சிகாவுடன் காதல் மற்றும் நடித்த சக நடிகைகளுடன் நெருக்கம் என்று பல காதல் தோல்வி சர்ச்சைகளிலும் சிக்கினார். மேலும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு தன்னுடைய மார்க்கெட்டையும் இழந்தார்.

பல நடிகைகளுடன் காதல் தோல்வி!! சிம்புவின் திருமணம் குறித்த செய்தியை கூறிய தந்தை | Simbu Marriage When T Rajendar Open Talk Pressmeet

40 வயதுக்கும் மேல் ஆகியுள்ள சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். அப்படி சமீபத்தில் சிம்புவுடன் நடித்த நித்தி அகர்வாலை திருமணம் செய்யவுள்ளார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து அவரது தந்தை டி ராஜேந்தர் பேட்டியொன்றில் விளக்கமளித்துள்ளார். அதில், என் மகனுக்கு பிடித்த மணப்பெண்ணை தேர்வு செய்ய என்னைவிட என் மனைவியைவிட சிம்புவுக்கு தான் பெண்ணை பிடிக்க வேண்டும்.

அப்படி என் குடும்பத்திற்காக குலமகளை, அந்த கலைமகளை, என் இல்லத்திற்கு ஏற்ற திருமகளை தேர்வு செய்ய இறைவன் கையில் தான் இருக்கிறது. என்னை பலர் கேட்கிறார்கள் சிம்புவுக்கு திருமணம் எப்போது என்று. அது இறைவன் அருளால் நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.