திருமணம் செய்யாமல் இருக்க சிம்புவுக்கு இப்படியொரு மோசமான காரணமா.. இதெல்லாம் நியாயமா..

Silambarasan Hansika Motwani Nayanthara Vendhu Thanindhathu Kaadu Nidhhi Agerwal
By Edward Sep 11, 2022 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இயக்குனர் டி ராஜேந்திரன் மகனாக பிரபலமானவர் நடிகர் சிம்பு. STR என்று ரசிகர்களால் புகழப்படும் சிம்பு சில வருடங்களுக்கு முன் சினிமாவில் தோல்விகளையும் வாய்ப்பில்லாமலும் இருந்து வந்தார்.

இதனை அடுத்து மாநாடு படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன்பின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து விரைவில் படமும் வெளியாகவுள்ளது. சினிமா தான் அப்படி என்றால் திருமணம், காதல் வாழ்க்கையும் சிம்புவுக்கு தோல்வியில் தான் அமைந்து வந்தது. நடிகை நயன் தாரா, ஹன்சிகா போன்றவர்களை காதலித்து சில காரணங்களால் தோல்வியையும் சந்தித்தார்.

திருமணம் செய்யாமல் இருக்க சிம்புவுக்கு இப்படியொரு மோசமான காரணமா.. இதெல்லாம் நியாயமா.. | Simbu Openup Her Marriage Plan And Secret

இதன்பின் ஆன்மீகத்தில் இறங்கி வந்த சிம்பு 40 வயதுக்கும் மேல் ஆகியும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் கூட நடிகை நித்தி அகர்வாலுடன் காதலில் இருப்பதாகவும் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வைரலானது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்து வரும் சிம்புவிடன் ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு காரணத்தை கூறியிருக்கிறார் சிம்பு. என் திருமணம் பற்றி சமீபகாலமாக பல கேள்விகள் வருகிறது.

திருமணம் செய்யாமல் இருக்க சிம்புவுக்கு இப்படியொரு மோசமான காரணமா.. இதெல்லாம் நியாயமா.. | Simbu Openup Her Marriage Plan And Secret

இவரை காதலிக்கிறேன், திருமணம் செய்ய போகிறேன் என்ற செய்திகள் பரவி வந்தது. என்னை திருமண கோலத்தில் பெற்றோர்கள் பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதையும் நானும் விரும்புகிறேன்.

ஆனால் திருமணம் செய்ய பயமாக இருக்கிறது. அவசரப்பட்டு கல்யாணம் செய்து பின் சண்டை, விவாகரத்து என பல பிரச்சனைகள் வந்துவிடக்கூடாது என்ற பயத்தின் காரணமாக தான் திருமணத்தை தள்ளிப்போட காரணம் என்று கூறியுள்ளார். சரியான துணை அமையும் வரை காத்திருக்கலாம் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகர் சிம்பு.