திருநங்கையாக மாறும் நடிகர் சிம்பு!! ஏன் தெரியுமா...
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு, பத்து தல படத்திற்கு பின் உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகினார்.
ராஜ் கமல் ப்லிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பிரம்மாண்ட போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.
ரசிகர்கள் மத்தியில் முகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து வருகிறாராம். அதிலும் சமீபத்தில் வெளியான போஸ்டரில் முரட்டுதனமாக இருவரும் முறைக்கும் லுக் அனைவரையும் மிரட்டி இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரம் ஒரு திருநங்கையாம். அதற்காக பயிற்சி பெற்று திருநங்கையாக மாறப்போகிறாராம் சிம்பு.
அந்த நடை, உடை, பாவனையை மாற்றி வருகிறாராம். இந்த தகவலை பார்த்து சிம்பு ரசிகர்கள் பல கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
