உன்னை நினைக்காத நாளே இல்லை.. இழந்த நபரை நினைத்து வருந்தும் சிம்ரன்
சிம்ரன்
நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவின் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிகட்டி பறந்தவர். ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட இவர் விஜய், அஜித், சூர்யா, கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். ஒரு காலகட்டத்திற்கு பின் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
நடிகை சிம்ரனின் தங்கை மோனலும் கோலிவுட்டில் நடிகையாக பார்வை ஒன்றே போதுமே படத்தின் மூலம் அறிமுகமானவர் பின் பத்ரி, சமுத்திரம், இஷ்டம், விவரமான ஆளு உள்ளிட்ட படங்களில் நடித்தார், ஆனால் கடந்த 2002ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
சிம்ரன் வருத்தம்
இந்நிலையில், நடிகை சிம்ரன் தனது தங்கையின் 23வது ஆண்டு நினைவு நாளுக்காக ஒரு எமோஷ்னல் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், இந்த 23 வருடங்களில் ஒருநாள்கூட உன்னை நாங்கள் நினைக்காமல் இருந்ததில்லை மோனல். நீ மறைந்திருக்கலாம் ஆனால் யாராலும் மறக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Not a day goes by without a thought of you, Monal. 23 years, and I still look for pieces of you in the quiet moments 💔#SisterLove #GoneButNotForgotten
— Simran (@SimranbaggaOffc) April 14, 2025