இளம் நடிகர் முதல் வயதான நடிகர் வரை.. சிம்ரனை காதலித்து கைவிட்ட டாப் ஹீரோஸ்
90ஸ் கிட்ஸின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர் தான் நடிகை சிம்ரன். தற்போது இவர் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சிம்ரன் இளம் வயதில் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். முதன் முதலில் நடிகர் அப்பாஸை காதலித்தாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து விஐபி என்ற படத்தில் நடித்திருந்தனர். அப்பாஸ் சிம்ரனை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து பிரபு தேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் உடன் காதலித்தாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. இந்த காதலும் பிரிவில் முடிந்ததாம்.
இதன் பின்னர் உலக நாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அந்த சமயத்தில் கமல் சிம்ரனை டேட்டிங் செய்ததாக தகவல் வெளியானது.