திருமணமானாலும் அதுமட்டும் என்னால் முடியவில்லை!! சிம்ரன் என்ன சொல்லிருக்காங்க பாருங்க..
சிம்ரன்
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை சிம்ரன். மும்பையில் இருந்து வந்த சிம்ரன், ஒன்ஸ்மோர் படத்தில் ஹீரோயினாக தமிழில் நடித்தார். அதன்பின் நேருக்கு நேர், விஐபி போன்ற படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த சிம்ரன், நீண்டநாள் காதலரை திருமணம் செய்து குடும்பத்தை பார்த்துக்கொண்டார். அதன்பின் ஒருசில படங்களில் நடிக்க ஆரம்பித்த சிம்ரனுக்கு திருமணத்திற்குப்பின் வாரணம் ஆயிரம் படம் மிகப்பெரிய ரீஎண்ட்ரி கொடுத்தது.
தற்போது குணச்சித்திர ரோல்களிலும் நடித்து வரும் சிம்ரன், சமீபத்தில் நடந்த விருதுவிழாவில் கலந்து கொண்டு பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
திருமணமானாலும் அதுமட்டும்
அதில், திருமணமானப்பின் நமக்கு பொறுப்புகள் அதிகமாகிவிடும், எனவே படங்களில் நடிப்பதை நான் குறைத்துக்கொண்டேன். என்னுடைய குடும்பம் நிறைய சப்போர்ட்டாக இருந்தார்கள்.

2003ல் திருமணம் செய்து கொண்டேன், திருமணமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. என்னால் எப்போதுமே என் ரசிகர்களை விட்டுப்போகவே முடியவில்லை, அது எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது என்று சிம்ரன் தெரிவித்துள்ளார்.