அதெல்லாம் என்னால சமாளிக்க முடியாது.. பாலிவுட் சினிமா குறித்து பேசிய சிம்ரன்

Simran Bollywood
By Karthick Raja Jun 06, 2025 03:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் சிம்ரன். விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். 90ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர், சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் The Last One எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

அதெல்லாம் என்னால சமாளிக்க முடியாது.. பாலிவுட் சினிமா குறித்து பேசிய சிம்ரன் | Simran Talk About Bollywood

இந்த நிலையில், பாலிவுட் சினிமா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதில் "தமிழ்ல இருந்து ஹிந்தில போய் வேலை செய்யணும்னு நான் நினைத்து கூட பார்க்கல. எனக்கு தமிழில் நடிப்பதே ரொம்ப சௌகர்யமா இருக்கு.

இன்னும் கேட்டா எங்க வீட்ல இருக்குற மாதிரி இருக்கு. இங்க இருக்கிற மனிதர்கள் எல்லாம் ரொம்ப சிம்பிளா இருக்காங்க. அதுதான் எனக்கு பிடித்த விஷயம். அங்கெல்லாம் ரொம்ப ஷோ ஆப் பண்ணுவாங்க. அதெல்லாம் என்னால சமாளிக்க முடியாது. அதனால்தான் என்னால் வேற எங்கேயும் போய் செட்டில் ஆக முடியல" என கூறியுள்ளார்.