விவேக், சந்தானம் கூட நடிச்சேன்..சண்டைப்போட்டாரு வடிவேலு!! உண்மையை உடைத்த பிரபல நடிகர்..
வைகைப்புயல் வடிவேலு
தமிழ் சினிமாவில் காமெடி லெஜண்ட் நடிகராக திகழ்ந்து வந்தாலும் சிலரிடம் ஏற்பட்ட பிரச்சனைகளால் விமர்சனத்திற்கும் ஆளாகி வந்தவர் வைகைப்புயல் வடிவேலு.
சில ஆண்டுகள் ரெட் கார்ட் போடப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்த வடிவேலு, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். பலரும் அவரை புகழ்ந்து பேசினாலும் ஒருசிலர், அதிலும், அவருடன் இணைந்து நடித்த நடிகர்கள் கூட அவரை விமர்சித்து பேசி வந்தனர்.
சிங்கமுத்து
சமீபத்தில் நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியொன்றில், வடிவேலு ஒரு கேங்க் வெச்சிருந்தாரு. வடிவேலுவுடன் நடிக்கும்போது நாங்கள் யார் கூப்பிட்டாலும் போவது கிடையாது.
அப்படி போனால் இவன் எங்களை நடிக்கவிடமாட்டான். நான் சந்தானத்துடன் போய் நடித்தேன், அதுக்கே சண்டை. நம்ம ட்ரெண்ட் எல்லாம் போய் சொல்லிடுவேன்னு திட்டுவாறு.
என்ன ட்ரெண்ட்டு, உலகத்தில் இல்லாத ட்ரெண்ட்டு?. சந்தானம் அறிவாளி, எல்லாமே எழுந்துவாரு, எல்லாமே பண்ணுவாரு, நல்ல மனிதர், நல்ல நடிகர். அந்தமாதிரியா யார்கிட்டயும் போகக்கூடாது. விவேக் சார் கூட நடிச்சாலே திட்டுவாரு, அதன்பின் அவரை மாமா மச்சான்னு பேசுவாரு என்று சிங்கமுத்து பகிர்ந்துள்ளார்.