AR ரஹ்மான் இசையில் பாடியதால் இளையராஜா வாய்ப்புத் தரவில்லை... மின்மினி பரபரப்பு புகார்

Ilayaraaja
By Dhiviyarajan Jun 25, 2023 09:59 AM GMT
Report

1992 -ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் ஏ. ஆர் ரஹ்மான். இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

ரோஜா இடம் பெற்ற சின்ன சின்ன ஆசை என்ற பாடல் தான் அவரின் முதல் அடையாளம் எனலாம். தற்போது வரை இந்த பாடலுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இப்பாடலை பாடியவர் பிரபல பாடகி மின்மினி. இவர் இளையராஜா இசையமைப்பில் பல பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மின்மினி, சின்ன சின்ன ஆசை பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அந்த சமயத்தில் இளையராஜா என்னிடம் வேறு இடத்தில் பாடத் தொடங்கிவிட்டாய் இனி அங்கேயே சென்று பாடு என்று மறைமுகமாக AR ரஹ்மான் குறித்து இளையராஜா பேசியதாக மின்மினி கூறியுள்ளார். தற்போது இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.