இதை செய்ய சில பெண்களே முன் வருகிறார்கள்..இசையமைப்பாளர் குறித்து பாடகி ஸ்வாகதா...
பாடகி ஸ்வாகதா
சினிமாத்துறையில் இருந்து விலகி தற்போது ரிஷிகேஷில் வசித்து வரும் பாடகி ஸ்வாகதா, ஒரு இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் பாலியல் குற்றச்சாட்ட்டை மீண்டும் முன்வைத்துள்ள சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
சமீபத்திய அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர், அவர்களை கட்டாயப்படுத்தி உரையாட வைத்திருக்கிறார். எங்களின் கண்ணியத்தை பறித்து, பணத்தை பறித்து மிரட்டி பிளாக்மெயில் செய்தார்.

இன்று கூலிங் கிளாஸ் அணிந்து, சோசியல் மீடியா பிம்பங்கள் குறித்தும், சமூகத்தின் மனநிலை குறித்தும், பிஆர் நடைமுறை குறித்தும் பேட்டி கொடுத்து வருகிறார்.
ஆன்மிக படம் ஒன்றுக்கு இசையமைக்கும் அவரை, மேடைக்கு அழைத்து இரண்டு பெண்கள் கேக் ஊட்டி வரவேற்கிறார்கள். இதைத்தான் சினிமா ஆதரிக்கிறது. இதைச்செய்ய சில பெண்களே முன் வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த பலரும் யார் அந்த இசையமைப்பாளர் என்ற கேள்வியை மீண்டும் எழுப்பி வருகிறார்கள்.