பிக்பாஸ் வீட்டுக்குள் சிறகடிக்க ஆசை சீரியல்!! வைரலாகும் வீடியோ..

Bigg Boss Siragadikka Aasai Bigg Boss Tamil 8
By Edward Oct 23, 2024 12:30 PM GMT
Edward

Edward

in Television
Report

பிக்பாஸ்

நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக கலந்து கொண்டு விஜய் டிவியில் பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் சிறகடிக்க ஆசை சீரியல்!! வைரலாகும் வீடியோ.. | Siragadikka Aasai Team In Bigg Boss Tamil Season 6

18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றுள்ள நிலையில் கடந்த இரு வாரத்தில் ரவீந்தர் மற்றும் அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு அனுப்பப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஆண், பெண் போட்டியாளர்கள் இடையே போட்டிகளும் சண்டைகளும் தற்போது நடந்து வருகிறது.

சிறகடிக்க ஆசை

இந்நிலையில், சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த 2023 ஜனவரி மாதம் துவங்கியது.

பிக்பாஸ் வீட்டுக்குள் சிறகடிக்க ஆசை சீரியல்!! வைரலாகும் வீடியோ.. | Siragadikka Aasai Team In Bigg Boss Tamil Season 6

இந்த சீரியலின் துவங்கப்பட்ட நேரத்தில் தான் பிக்பாஸ் சீசன் 6 நடைபெற்று வந்தது. சீரியலை புரமோட் செய்ய பிக்பாஸ் வீட்டிற்குள் சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய ரோலில் நடித்த கதாநாயகன் மற்றும் கதாநாயகி சென்றுள்ளனர்.

தற்போது அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை சந்தித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.