புதிதாக சொகுசு கார் வாங்கியுள்ள சிவாங்கி.. விலை இத்தனை கோடியா!! அடேங்கப்பா
சூப்பர் சிங்கர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, பின் குக் வித் கோமாளி மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் சிவாங்கி. இவர் தற்போது தொகுப்பாளினியாக கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நானும் ரவுடி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இவர், அடுத்ததாக ஒளிபரப்பாக உள்ள டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார்.
இந்நிலையில், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள சிவாங்கி புதிதாக மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ. 1.5 கோடி ஆகும். சிவாங்கி தனது அம்மா, அப்பாவுடன் சென்று அந்த காரை மகிழ்ச்சியுடன் வாங்கியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..