கதையை சொல்லாமலே படத்தில் நடிக்க வைத்த இயக்குனர்! புலம்பி தள்ளிய சூப்பர் சிங்கர் சிவாங்கி

Sivakarthikeyan Sivaangi Krishnakumar Super Singer
By Edward Apr 29, 2022 09:30 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் டான். பல எதிர்ப்பார்ப்புகள் வரும் மே 13 ஆம்தேதி தியேட்டர்களில் படம் வெளியாகவுள்ளது.

அப்படத்தின் பிரமோஷனுக்காக படத்தில் நடித்த சூப்பர் சிங்கர் சிவாங்கி, பாலா சரவணன், விஜே விஜய் போன்றவர்கள் இணையத்தளத்திற்கு பேட்டியளித்துள்ளனர். காமெடியாக பேசிய சிவாங்கி எனக்கு இயக்குனர் கதையை முழுவதும் கூறாமலே நடிக்க வைத்தார்.

பாலா சரவணன் மற்றும் விஜே விஜய்க்கும் மட்டும் இயக்குனர் சேர்த்தே கதையை கூறியிருக்கிறாராம். சிவாங்கியின் முதல் படமாக அமைந்துள்ள டான் படத்தில் என்னுடைய கேரக்டர் பற்றி மட்டுமே இயக்குனர் கூறினார் என்பதை அவர் பாணியில் சிவாங்கி கூறியுள்ளார்.

டான் படத்தின் ஷீட்டிங் கடைசி நாளில் தான் பீஸ்ட் படத்தின் படப்பிடிக்கு சிவகார்த்திகேயன் அண்ணன் கூட்டிச்சென்றார். அங்கு தளபதி விஜய் அண்ணனிடம் என்னை பற்றி கூறி அறிமுகப்படுத்தினார் சிவகார்த்திகேயன்.

பின் என்னுடைய நிகழ்ச்சியெல்லாம் பார்ப்பேன், நன்றாக இருக்கும் என்று விஜய் கூறியதாக தெரிவித்துள்ளார் சிவாங்கி.