சிவகார்த்திகேயன் தந்தை கொலை செய்யப்பட்டாரா? உள்நோக்கம் இல்லை வருத்தப்படுகிறேன் - எச் ராஜா..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து பின் 3 படத்தில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இவர் தந்தை பற்றி பல மேடைகளில் பேசி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியும் வருவார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தந்தையான ஜெயிலர் பிரகாஷ் தொலை செய்யப்பட்டார். அதை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவஹிருல்லா தான் என்று சர்ச்சையாக பேசி அதிர்ச்சியளித்திருந்தார்.
இந்த செய்தி கடந்த இரு நாட்களுக்கும் மேலாக இணையத்தில் பரவி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, எச் ராஜா மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் காவல்துறையினர் என்பதால் நடிகரின் தந்தை என தவறாக கூறிவிட்டேன். தன்னுடைய தவறுதான் என்றும் இதனால் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதற்காக வருந்துவதாகவும் மற்றபடி நான் கூறியது எல்லாம் உண்மை என்றும் கூறியுள்ளார் எச் ராஜா.