அமரன்: நடிகையை விட சிவகார்த்திகேயனுக்கு 10 மடங்கு அதிக சம்பளம் .. இதிலும் பாரபட்சமா!!

Sivakarthikeyan Sai Pallavi Tamil Cinema Actress Amaran
By Bhavya Nov 01, 2024 11:30 AM GMT
Bhavya

Bhavya

in Celebrity
Report

அமரன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டு நேற்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் அமரன்.

இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயன் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அமரன்: நடிகையை விட சிவகார்த்திகேயனுக்கு 10 மடங்கு அதிக சம்பளம் .. இதிலும் பாரபட்சமா!! | Sivakarthikeyan Got Higher Salary

இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் சினிமா நட்சத்திரங்கள், இயக்குனர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமரன்: நடிகையை விட சிவகார்த்திகேயனுக்கு 10 மடங்கு அதிக சம்பளம் .. இதிலும் பாரபட்சமா!! | Sivakarthikeyan Got Higher Salary

இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதிக சம்பளம்

அதன்படி, அமரன் படத்திற்காக சாய்பல்லவி ரூ.3 கோடி சம்பளம் பெற்றதாகவும், சிவகார்த்திகேயன் இதற்கு 10 மடங்கு அதிகமாக அதாவது ரூ.30 கோடி சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.