விதவிதமாக போஸ் கொடுக்கும் அல்டிமேட்!! பப்ளிசிட்டிக்காக சிவகார்த்திகேயனை பகடைக் காயாய் பயன்படுத்தும் அஜித்.

Ajith Kumar Sivakarthikeyan Gossip Today Thunivu
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாராக திகழ்ந்து பல லட்ச ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை அஜித்குமார். வலிமை படத்திற்கு அதே கூட்டணியில் எச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார்.

விதவிதமாக போஸ் கொடுக்கும் அல்டிமேட்!! பப்ளிசிட்டிக்காக சிவகார்த்திகேயனை பகடைக் காயாய் பயன்படுத்தும் அஜித். | Sivakarthikeyan Meet Ajithkumar For Thunivu Prote

துணிவு படம் பொங்கல்

ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. எப்போது அஜித் படங்கள் என்றால் பெரியளவில் விளம்பரமே இருக்காது.

ஆனால் இப்படத்தினை ஆரம்பித்த சில மாதங்களில் அஜித் ரசிகர்களை சந்தித்தும் பைக் ரைட் சென்றால் கூடவே கேமராமேனை கொண்டு சென்று விதவிதமாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. விஜய் படத்தை பற்றியோ அடுத்த படங்களின் அப்டேட் பற்றி வந்தா உடனே அஜித்தின் எதாவது தகவலோ புகைப்படமோ வந்துவிடும்.

சிவகார்த்திகேயன்

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயான் சமீபத்தில் அஜித்தை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆனால் இப்புகைப்படம் கடந்த மாதம் அக்டோபர் 23 ஆம் தேதிக்கு மேல் எடுக்கப்பட்டதாம்.

இதையேன் அப்போது பதிவிடாமல் இப்போது சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கிறார் என்று பலர் கேள்வி கேட்டும் பப்ளிசிட்டிக்காக அஜித் இப்படி சிவகார்த்திகேயனை பயன்படுத்துகிறாரா என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Gallery